யாழ்.பல்கலையில் உளவியல் கண்காட்சி

உளநல வாரத்தை முன்னிடடு “உளவியல் கண்காட்சி” ஒன்று யாழ்.பல்கலைக்கழக புதிய கலைப்பீட கட்டடத் தொகுதியில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகியது.

exbition

யாழ். பல்கலைக்கழக மெய்யியல் உளவியல் துறை மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெறும் இக் கண்காட்சிக்கு பிரதம விருந்தினராக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் கலந்துகொண்டார்.

இக் கண்காட்சியை இன்று முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை பார்வையிடலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.