யாழ். பல்கலையின் கல்விசாரா ஊழியர்கள் அடையாள உண்ணவிரதம்

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று அடையாள உண்ணவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தங்களது சம்பள முரண்பாடுகளைத் தீர்த்து வைக்குமாறு கோரி கடந்த 6ஆம் திகதியிலிருந்து சாத்வீக வழியில் போராடிவரும் யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு ஆகியன தங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் எனக் கோரி இந்த அடையாள உண்ணாவிரத்ததை மேற்கொண்டு வருகின்றனர்

தமக்குரிய சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும் வரை தங்கள் போராட்டம் விரிவு படுத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

ஒப்பந்தம் கைசகத்திட்டால் மட்டுமே பணிப்பகிஸ்கரிப்பை கைவிடுவோம் – பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் தொழில் ஆணையாளரின்
மத்தியஸ்த்தத்தில் குறித்த ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டால் மாத்திரமே தொழிற்சங்க நடவடிக்கையை
நிறைவுக்கு கொண்டு வருவது குறித்து தீர்மானிக்க முடியும் என பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்
தொழிற்சங்க சம்மேளனத் தலைவர் ஆர்.எம்.சந்திரபால தெரிவித்துள்ளார்.

இதன்படி, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழு என்பவற்றிற்கு இடையே இன்றையதினம் ஒப்பந்தம் ஒன்று
கைச்சாத்திடப்படவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கத் தலைவர்களும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு பணிபுரிய
இணங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் இதிலும் உள்ளடக்கப்பட
வேண்டும் எனவும் அதன்படி இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.சம்பள பிரச்சினையை தீர்க்குமாறு கோரி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 6ம் திகதி தொடக்கம்
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.