யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வகுப்பு பகிஷ்கரிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கால வரையறையற்ற வகுப்பு பகிஷ்கரிப்பை திங்கட்கிழமை முதல் மேற்கொள்ளவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான பாதுகாப்பு கிடைக்கும் வரையில் கால வரையறையற்ற வகுப்பு பகிஸ்கரிப்பை மேற்கொள்ளோம் என மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளதுஇது தொடர்பில் மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“மாணவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தொடர்ச்சியான தாக்குதல்களால், மாணவர்கள் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக மாணவர்களினால் கல்விச் செயற்பாடுகளில் சுமூகமான முறையில் ஈடுபட முடியாமல் போகின்ற நிலை தோன்றியுள்ளது.

கடந்த காலத்தில் குறித்த மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சுப்பிமணியம் தவபாலசிங்கம் தாக்கப்பட்டதன் பின்னர், மாணவர்களின் கடுமையான எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக யாழ். மாவட்ட தலைமை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியுடன் ஆகியோருடன் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் நடத்திய கலந்தரையாடல்களின் போது, மாணவர்கள் மீதான தாக்குதல்கள் இனிவரும் காலத்தில் நடைபெறாதவாறு பாதுகாப்பு வழங்கப்படும் என்கின்ற உத்தரவாதம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த தாக்குதல்கள் நடைபெற்றிருப்பது தமிழ்க் கல்வி சமூகத்தில் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.தமக்கான பாதுகாப்பு கிடைக்கும் வரைக்கும் காலவரையற்ற வகுப்பு பகிஸ்கரிப்பை திங்கட்கிழமை முதல் மேற்கொள்ளவுள்ளோம்”.

Recommended For You

About the Author: webadmin