யாழ்.நகரில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஐவர் கைது

arrest_1யாழ். நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். குருநகர் மற்றும் நாவாந்துறை ஜந்து சந்தி பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 16 முதல் 21 வயதுக்குட்பபட்டவர்கள் என்றும் சனிக்கிழமை இரவு 10 மணியின் பின்னர் வீதிகளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் சில இளைஞர்கள் கையடக்கத் தொலைபேசி திருட்டு மற்றும் வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor