யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமாகியது.

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் மாகாலிங்கம், மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தனர்.

சர்வதேச வர்த்தக கண்காட்சியானது நான்காவது தடவையாக நடைபெறுகிள்றது. அதன்படி இன்று 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் இக் கண்காட்சி எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

JITF1