யாழ். – கொழும்பு புகையிரதத்தில் இளைஞர்கள் அட்டகாசம்

யாழ். – கொழும்பிற்கு இடையில் இரவு நேர போக்குவரத்தில் ஈடுபடும் புகையிரதங்களில் இளைஞர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இரவு நேர சேவையில் ஈடுபடும் தபால் புகையிரதம் மற்றும் யாழ்தேவி ஆகியவற்றின் சாதாரண வகுப்பு பெட்டியில் மது போதையில் பயணம் செய்யும் இளைஞர்கள் ஆபாசமாக பேசுவதுடன் வாசல் பகுதியில் நின்று புகைத்தலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு நாட்களிற்கு முன்பு கொழும்பில் இருந்து யாழ். நோக்கி வந்த இரவு நேர தபால் சேவை புகையிரதத்தில் மது போதையில் சாதாரண வகுப்பு பெட்டியில் பயணித்த இளைஞர்கள் சிலர் பெண்கள் அமர்ந்திருக்கும் ஆசனங்களிற்கு பக்கத்தில் அமர்ந்து போதை தூக்கத்தில் அவர்கள் மீது சாய்ந்து விழுந்துள்ளனர்.

இதனால் தொடர்ந்து பயணம் செய்ய முடியாத நிலையில் அவர்கள் வவுனியா புகையிரத நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்தில் யாழ்ப்பாணம் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.