யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான இராணுவத்தளங்கள் அனைத்தும், பலாலி இராணுவ தளத்துக்கு மாற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய இதனை அறிவித்துள்ளார். பலாலி இராணுவ தளத்தை பிரதான இராணுவத் தளமாக மாற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக மூன்று இராணுவத் தளங்கள் மாத்திரமே பேணப்படவுள்ளது.
ஏனைய அனைத்து தளங்களும், பலாலி தளத்துக்கு மாற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி