யாழ்ப்பாணத்தில் முத்தமிழ் விழா!

யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா எதிர்வரும் 16ஆம் திகதி காலை 8.30 மணி முதல் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

முத்தமிழ் விழா தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ்.மாநகர சபையில் இடம்பெற்ற போதே யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“காலை முதல் இரவு வரை இயற்துறை, இசைத்துறை, நாடகத்துறை என மூன்று அமர்வுகளாக நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது கம்பவாரிதி இ.ஜெயராஜ் குழுவினரின் வழக்காடு மன்றம், பாலமுருகன் மற்றும் குமரனின் நாத சங்கமம்,சத்தியவான் சாவித்ரி நாடகம், வீரபாண்டிய கட்டப்பொம்மன் நாடகம் உட்பட பல நிகழ்வுகள் அரங்கேறவுள்ளன.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor