யாழில் 8 கிலோ கிராம் வெடிமருந்து இராணுவத்தினரால் மீட்பு

explosivesயாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், கப்பல் துறைமுகத்தில் இருந்து 8 கிலோ கிராம் வெடிமருந்து இராணுவத்தினர் இன்று அதிகாலை மீட்டுள்ளனர்.

குருநகர் துறைமுகத்தில் மீன்பிடிக்கச் சென்ற சில மீனவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர்களிடம் இருந்து பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளது.

மீன்பிடிப்பதற்கு குறித்த வெடிபொருளை பயன்படுத்துவதாக மீனவர்கள், இராணுவத்தினரிடம் தெரிவிதுள்ளனர். எனினும் குறித்த மீனவர்களிடம் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.