யாழில் 2,966 படகுகளுக்கு எரிபொருள் மானியம்

fishing-boat_CIயாழ். மாவட்டத்தில் 2966 படகுகளுக்கு எரிபொருள் மானிய முத்திரை வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டக் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். மாவட்டக் கடற்றொழில் பரிசோதகர் பிரிவுகளான ஆழியவளை, தாளையடி, பருத்தித்துறை கிழக்கு, பருத்தித்துறை மேற்கு, காங்கேசன்துறை மேற்கு, காங்கேசன்துறை கிழக்கு, சண்டிலிப்பாய், சுழிபுரம், ஊர்காவற்றுறை, வேலணை, நெடுந்தீவு, யாழ்ப்பாணம் மேற்கு, யாழ்ப்பாணம் கிழக்கு, சாவகச்சேரி ஆகிய பிரிவுகளில் உள்ள படகுகளுக்கு மானிய எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதில் பலநாள் கலம் 29, ஒருநாள் கலம் 25, பிளாஸ்ரிக் படகுகளுக்கு 2580, மரத்தில் இயந்திரம் பூட்டப்பட்ட கலங்களுக்கு 332 எரிபொருள் மானிய முத்திரை வழங்கப்பட்டதென அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor