Ad Widget

யாழில் விபச்சார விடுதி முற்றுகை! அதிகாரிகள் அதிரடி!

யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் ”நது ஓய்வு விடுதி” என்ற பெயரில் இயங்கிவந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்று நேற்று(28)முற்றுகையிடப்பட்டுள்ளது.யாழ். பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளினால் இன்று மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏழு பேரில் பெண்கள் மூவரும் ஆண்கள் நால்வரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.அவர்களது அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் சம்பவ இடத்திற்க வருகை தரவில்லை. இது அவர்களின் கடமை உணர்வுக்கு நல்ல எடுத்துக்காட்டு என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.சட்டம் ஒழுங்கு நடவடிக்ககையில் பொலிசாரின் இந்த போக்கு கேள்விக்குரியதாக உள்ளது. எனினும் அதற்கு மாறாக புலனாய்வாளர்களே சம்பவ இடத்திற்கு பிரசன்னமாகி இருந்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பெண்ணை 5 பேர் வைத்து உடலுறவு கொள்வது என்பது சாதாரணமாக எந்தப் பெண்ணாலும் ஜீரணிக்க முடியாத ஒரு விடயமாகும். ஆனால் யுத்தத்தில் கணவனை இழந்த ஓர் இளம் பெண் தனது இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்காக காம வல்லூறுகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தபோது காப்பாற்றப்பட்டார்.

இந்த விபச்சார விடுதியில் நேற்று அகப்பட்டவர்களில் ஒரு மாணவியும் இரு மாணவர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்படுகின்றது.நேற்று விடுதிக்குள் ஊடகவியலாளர்கள் நுழைந்த போது அங்கு நின்ற பெண்களில் ஒருவர் தனது நிலையைச் சொல்லி அழுத போது ஊடகவியலாளர்களுக்கே கண்கள் கலங்கின. யுத்தம் என்பது எந்த அளவுக்கு எங்கள் இனப் பெண்களைக் கொண்டு சென்றுள்ளது என்பது கண் முன் தெரிந்தது.

புலம்பெயர் நாடுகளில் கேளிக்கை நிகழ்வுகளை நடாத்தி பணம் சம்பாதிக்கும் மற்றும் உணர்ச்சி அரசியல் செய்யும் தமிழ் ஊடகங்களும் அமைப்புக்களும் தாயகப் பிரதேசத்தில் இவ்வாறு தரக்குறைவான வாழ்கை நிலையில் இருப்பவர்களைப் பற்றியும் புலம்பெயர் மக்களுக்க அறிவுறுத்தி மக்களின் வாழ்க்கைத் தராதரத்தை உயர்த்த வழி செய்ய வேண்டியதன் அவசியத்தினை இந்தச்சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன

அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருக்கும் சேவை அமைப்புக்கள் தங்களை விளம்பரப்படுத்துவதற்காக சில நன்கொடைகளை செய்வதை விடுத்து பாதிக்கப்பட்ட பெண்களின் கண்ணீரைத் துடைக்க வழி செய்ய வேண்டும் இல்லாது விடின் இவ்வாறான விபச்சார விடுதிகள் பல யாழ்ப்பாணத்தில் மேலும் மேலும் உருவாக வழிசமைக்க நாங்களே காரணமாக அமைவோம் சம்பவத்தில் பிரசன்னமாயிருந்த ஊடகவியலாளர்கள் கருத்துதெரிவிக்கின்றனர்.

மேற்படி விடுதியின் பின்புலமாக அரசியல் கட்சி ஒன்றின் மகளிர் அமைப்பாளர் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த முற்றுகை நடவடிக்ககையில் யாழ்மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவக அமைப்பாளர் எஸ்.நிசாந்தன் பிரசன்னமாயிருந்தார். அவர் கருத்து தெரிவிக்ககையில் இது போன்ற விடுதிகள் நிறைய இருப்பதாகவும் மாநகரசபை ஆதரவுதருமாயின் அவற்றினை இனங்காண தாம் உதவுவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேற்படி விடுதியின் முகாமையாளராக கடமையாற்றிக்கொண்டிருந்தவர் உரிமையாளரினை கூட்டிவருவதாக கூறி வெளியேசென்றதாகவும் பின்னர் திரும்பவே இல்லைஎனவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை ஏற்கனவே சுமங்கலி என்ற விபச்சார விடுதி முன்னர் யாழ் நீதிமன்றக்கட்டடத்திற்கு அருகாமையில் பிடிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

prostitude
முற்றுகை நடவடிக்கையில் அதிகாரிகள்

Related Posts