யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ். மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் கடமையாற்றும் களப் பணியில் ஈடுபடும் 2000 ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை 13 ஆம் திகதி வழங்கி வைக்கவுள்ளார்.
பெண்களுக்கு (Pleasure) பிளெஸ்ஸர் மோட்டார் சைக்கிளும் ஆண்களுக்கு (Discover 125) டிஸ்கவர் மோட்டார் சைக்கிள்களும் வழங்கப்படவுள்ளது.
நேற்று 350 டிஸ்கவர் (Discover ) மோட்டார் சைக்கிள்கள் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளது. இன்று 1000 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுவரப்படவுள்ளது.
பெண்களுக்காக pleasure மோட்டார் சைக்கிள்கள் நாவற்குழி உணவுக்களஞ்சிய சாலையில் கொண்டு வந்து இறக்கப்பட்டு மோட்டார் சைக்கள்களுக்கான உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.