இரண்டு வருடகால பயிற்சியையும் நிறைவு செய்த கோப்பாய் ஆசிரியர் கலாசாலையை சேர்ந்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (02) கலாசாலை ரதிலக்ஷ்மி மண்டபத்தில் ஆசிரிய கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் தலைமையில் நடைபெறலுள்ளது.
இரண்டு வருட கால பயிற்சியை நிறைவு செய்து இறுதிப் பரீட்சையில் தோற்றிய 458 ஆசிரியர்களில் சித்தியடைந்த 448 பேருக்கு இந்த சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
ஆசிரியர் உதவியாளர்களாக ஆசிரியர் பயிற்சியில் இணைந்து கொண்ட இவர்கள் பயிற்சி சான்றிதழ் சகிதம் தமது விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதன் மூலமே ஆசிரியர் சேவையில் நிரந்தர நியமனம் பெறுவதோடு ஓய்வூதிய உரிமையோடு இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3இல் உள்ளீர்ப்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.