யாழில் திருட்டு மின்சாரம் பெற்றவர்களிடம் 60 இலட்சம் ரூபா தண்டமாக அறவீடு

fineயாழ் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் திருட்டு மின்சாரம் பெற்றவர்கள் 60 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்தியதாக இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் யாழ் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட 53 பேரிடம் இருந்து 18 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாவும், பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட 39 பேரிடம் இருந்து 22 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாவும், மார்ச் மாதத்தில் 29 கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 13 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாவும், ஏப்ரல் மாதம் 16 பேர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாவும் அறவீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் தொடுகை மூலம் சட்ட விரோதமாக மின்சாரத்தைப் பெற்ற குற்றத்திற்காக தண்டப்பணம் செலுத்தியுள்ளனர் என இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor