யாழில் சுசில் பிரேமஜயந்தவின் தேர்தல் பிரசாரம்

angajan-susilperemajeyanthaயாழிற்கு விஜயம் மேற்கொண்ட சுற்றாடல்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் மாகாண சபை தேர்தல் பிரசார நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட தேர்தல் பிரசார நடவடிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடவுள்ள உறுப்பினர்களான சட்டதரணி முடியப்பு ரெமீடியஸ், தயா மாஸ்டர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் கையளிக்கப்பட்டன.