யாழில் சிங்கள மக்களின் குடிப்பரம்பல் கணிப்பீடு!– அரசு உத்தரவு

RegPenவடமாகாண சபைத் தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் அரசாங்கம் யாழ். மாவட்டத்தில் சிங்கள மக்களின் குடிப் பரம்பலை கணிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 1983ம் ஆண்டுக்கு முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் சம்பந்தமான விபரங்களையும் மற்றும் தற்போது யாழ் மாவட்டத்தில் வாழந்து கொண்டு இருக்கும் சிங்கள மக்கள் சம்பந்தமான விபரங்களை சேகரிப்பது சம்பந்தமாக யாழ் மாவட்ட பிரசெ பிரதேச செயலகங்களுக்கு சுற்று நிரூபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கிராம அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள கிராம அலுவலர்களின் பிரிவுகள் ரீதியாக தற்போது குறிப்பிட்ட விபரங்களை பெறுவதில் கிராம அலுவலர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆனாலும் 1983 ம் ஆண்டுக்கு முன்னரான விபரங்களை பெறுவதில் பெரும் சிரமம் காணப்படுவதாகவும் முன்னர் வாழந்த சிங்கள மக்கள் பற்றிய விபரம் தெரிந்த முதியவர்கள் இல்லாததுதுடன பெருமளவான கிராம அலுவலர்கள் 1983 ம் ஆண்டின் பின்னர் நியமனம் பெற்றவர்களே கடமையாற்றுவதினால் பெற முடியாத நிலமையும் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.