யாழில் இளைஞரை காணவில்லையென முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் அவரது தாயார் சனிக்கிழமை முறைப்பாடு செய்துள்ளார். ஹலோ ஸ்ரெட் எனப்படும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணியாற்றுகின்ற நற்குணராஜா சாரங்கன் (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 12ஆம் திகதி வேலைக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட தனது மகன் இதுவரையில் வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணையை யாழ். பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor