யாழில் இராணுவத்தின் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் ஏற்பாட்டில் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி இன்று (29) காலை 9 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

.

பனங்காட்டில் புத்தி கூர்மை எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இப் ´புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி´ இன்றும் நாளையும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சி கூடத்தினை யாழ்.பாதுகாப்பு படைத்தளபதி மகேஷ் சேனநாயக்க மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் திறந்து வைத்ததுடன், காட்சிப்படுத்தப்பட்ட இலத்திரனியல் கண்டுபிடிப்புக்களையும் பார்வையிட்டனர்.

பாடசாலை மாணவர்களுக்கு பயன்படும் வகையில், இராணுவத்தினரால் குறித்த படைப்புக்கள் படைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.

இக் கண்காட்சியில் புதிய கண்டுபிடிப்புக்களை பார்வையிட ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

army-exibi-2

Related Posts