யாழில் இராணுவத்தினரின் யுத்தவெற்றி நிகழ்வு!மாணவர்கள் படையினருக்கு சின்னம் சூட்டினர்.

யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு யாழ். பலாலியில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன், யுத்தத்தில் உயிரிழந்த படை வீரர்களுக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள், படைத்தரப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்

நிகழ்வில் பாடசாலை மாணவ மாணவியர் அழைத்துவரப்பட்டிருந்தனர்.அத்துடன் மாணவர்களைக்கொண்டு படையினருக்கு சின்னம் சூட்டும் வைபவம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தைமையும் குறிப்பிடத்தக்கது