யாழில் அடையாள அட்டை இன்றி 46,000 பேர்!!

யாழ்ப்பாணத்தில் தேசிய அடையாள அட்டை அல்லாதவர்கள் 46 ஆயிரம் பேர் இருப்பதாக, யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் நேற்று (14) தெரிவித்தார்.

2014ம் ஆண்டிற்கான வாக்களார் இடாப்பிற்கான பி.சி படிவம் நிரப்பப்பட்டு, 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில், 46 ஆயிரத்து 838 பேர் தேசிய அடையாள அட்டை இன்றி இருப்பதுடன், 7 ஆயிரத்து 126 பேர் தவறான தேசிய அடையாள அட்டை வைத்திருக்கின்றார்கள். அந்த வகையில், அடையாள அட்டை இன்றியும், தவறான அடையாள அட்டை வைத்திருப்பவர்களாக 53 ஆயிரத்து 964 பேர் யாழ். மாவட்டத்தில் உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

இவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தேர்தல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மேலும் கூறினார்.