யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக ராஜித ஸ்ரீ தமிந்த, தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது நடைபெற்ற சமய வழிபாடுகளைத் தொடர்ந்து, மதத் தலைவர்களின் ஆசியுடன் வைபவரீதியாக மாலை 3.50 மணியளவில் பிரதி பொலிஸ்மா அதிபர், தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பிராந்தியங்களுக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர்கள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய பாலித பெர்னாண்டோ, பொலிஸ் சேவையிலிருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்தே யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ஆர்.எஸ்.தமிந்த நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.