யாழின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும்

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த, தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்ற வேண்டியுள்ளதால், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் புதிய மின்மாற்றி நிறுவுவதற்காகவும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமைவரை மின்விநியோகம் தடைப்படும் என யாழ். மாவட்ட மின்பொறியியலாளர் தெரிவித்தார்.

நாளை சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை கரந்தன், ஊரெழு, நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, நல்லூர், செம்மணி, அரியாலை, நாவற்குழி, கைதடி, கைதடி வடக்கு, நுணாவில், சாவகச்சேரி, மட்டுவில், உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீடப் பிரதேசம், திருநெல்வேலிப் பிரதேசம், பட்டணப்பகுதி, யாழ். மாநகரசபைப் பகுதி, கந்தர்மடம், ஸ்ரான்லி வீதி, நாச்சிமார் கோவிலடி முதல் தட்டார்தெரு ஊடாக மனோகரா தியேட்டர் வரையான பகுதிகளில் மின்வெட்டு தடைப்படவுள்ளது.

நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 6 மணிவரை பிறவுண் வீதி, கஸ்தூரியார் வீதி, கன்னாதிட்டி, மாவடி, தட்டார்தெரு தொடக்கம் முட்டாஸ்கடைச் சந்தி வரையான பிரதேசம், திருநெல்வேலிப் பிரதேசம், பரமேஸ்வரா சந்தி, கந்தர்மடம், ஆரியகுளம், ஸ்ரான்லி வீதி, வேம்படி, குருநகர், பாஷையூரின் ஒரு பகுதி, மனோகரா பிரதேசம் ஆகிய பகுதிகளில் மின்வெட்டு தடைப்படவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை அன்னங்கை முதல் கே.கே.எஸ் வீதி, கோவில் வாசல் சந்தி போன்ற பகுதிகளிலும் எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் அளவெட்டி, மல்லாகம் ஒரு பகுதி, பன்னாலை, வித்தகபுரம், சிறுவிளான், விளான், அம்பனை ஆகிய இடங்களிலும் மின்வெட்டு தடைப்படவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமைகளில் குளப்பிட்டிப் பிரதேசம், கொக்குவில் பிரதேசம், நாச்சிமார் கோவிலடி, கோம்பயன்மணல் பிரதேசம் ஆகிய இடங்களிலும் புதன்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 6 மணிவரை களபூமி பிரதேசம், காரைநகர் டிப்போ பிரதேசம், தீவகப் பிரதேசம் முழுவதும் ஆகிய இடங்களிலும் மின்விநியோகம் தடைப்படவுள்ளது.

மின்விநியோக மார்க்கங்களுக்கு இடையூறாகவுள்ள மரங்கள், மரக்கொப்புக்கள், தென்னை ஓலைகள், பனை ஓலைகள் என்பவற்றை வெட்டியகற்றி தடையற்ற மின்சார விநியோகத்தை பெற்றுக்கொள்ள மின்சார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ். மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor