மோட்டார் சைக்கிள் – சைக்கிள் விபத்தில்: ஒருவர் பலி! இருவர் படுகாயம்!!

மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவர் இரவில் வெளிச்சமின்றி வந்த சைக்கிளுடன் மோதி நிலை தடுமாறி மதிலுடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியானார்.சைக்கிளில் சென்ற இருவரும் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மிணயளவில் காரைநகர் பொன்னாலைச் சந்தியில் இடம்பெற்றது. இதில் காரைநகர் இலகடியைச் சேர்ந்த கனகரத்தினம் கிருஷ்ணபாலன் (வயது 31) என்பவரே மரணமானவராவார்.

யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் இவர் நேற்றிரவு பணி முடிந்த பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அச்சமயம் கடலில் வலை விரிப்பதற்காக சைக்கிளில் சென்ற இருவருடன் விபத்துக்குள்ளானார்.

இதனால் நிலைதடுமாறியவர் அருகில் இருந்த மதிலுடன் தலை மோதியதில் சம்பவ இடத்திலேயே மரணமானார். இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக காரைநகர் வலந்தலை வைத்தியசாலையில வைக்கப்பட்டுள்ளது. சைக்கிளில் வந்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.