மோடி, அத்வானி, சோனியா உள்ளிட்ட புதிய எம்.பிக்கள் பதவியேற்பு!!

16-வது லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நரேந்திரமோடி, அத்வானி, சோனியாகாந்தி உள்ளிட்ட அனைவரும் நேற்று தற்காலிக சபாநாயகர் கமல்நாத் முன்னிலையில் பதவியேற்றனர்.

modi

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 46 பேர் கொண்ட புதிய மத்திய அமைச்சரவை கடந்தவாரம் பதவியேற்றது.

அதனைத் தொடர்ந்து நேற்று 16-வது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் தொடங்கியது. இது குறுகிய கால கூட்டத்தொடர் ஆகும். 16-வது லோக்சபா உறுப்பினர்கள் நேற்று பதவியேற்க உள்ளதால், முன்னதாக தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் மூத்த எம்.பி கமல்நாத் பதவியேற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சாலை விபத்தில் பலியான மத்திய அமைச்சர் முண்டேவுக்கு இரங்கல் தெரிவித்து நேற்றைய முதல்நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

Related Posts