‘மேலாடையை கழற்றாது அம்மன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸ் அதிகாரி’

Nainatheevuசிவில் உடையில் ஆலயத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரியொருவர் மேலாடையை கழற்றாமல் கோவிலுக்குள் நுழைந்தது மட்டுமன்றி தான் பாதுகாப்பு அதிகாரியென்றும் மேலாடையை கழற்றமாட்டேன் என்றும் அடம்பிடித்துள்ளார்.

நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற பூஜையிலேயே குறித்த பொலிஸ் அதிகாரி மேலாடையை கழற்றாமல் கலந்துக்கொண்டுள்ளார்.

குறித்த கோவிலுக்கு பூஜைக்கு செல்கின்ற ஆண்கள் மேலாடையை கழற்றிவிட்டே ஆலயத்திற்குள் நுழைய வேண்டும்.
எனினும், குறித்த அதிகாரி அவ்வாறு செய்யவில்லை. அவரின் நடவடிக்கை தொடர்பில் ஆலயத்தில் இருந்த ஏனைய பக்தர்கள் அவருக்கு எடுத்துரைத்த போதிலும் குறித்த அதிகாரி அவர்களின் பேச்சை கணக்கில் எடுக்கவில்லை,

குறித்த அதிகாரியின் நடவடிக்கை தொடர்பில் அங்கிருந்த பூசகர் ஒருவரின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதிலும் பாதுகாப்பு தரப்பினருடன் முரண்பட்டுக்கொள்ள விரும்பவில்லை என்பதனால் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் தொடர்பில் அவருக்கு தெளிவுப்படுத்த தாம் விரும்பவில்லை என்று அங்கிருந்த பூசகர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த கோவிலுக்கு வந்திருந்த போது பூஜை வழிபாடுகள் மற்றும் சம்பிரதாயங்களை கடைப்பிடித்தார் என்பதனை குறித்த அதிகாரிக்கு தான் தெளிவுப்படுத்தியதாக அந்த பூசகர் தெரிவித்துள்ளார்.

அந்த அதிகாரியின் ஆலயத்தின் புனிதத்துவத்தை கெடுத்த இந்த அநாகரிகமானதும், அடாவடித்தனமானதுமான செயற்பாடுகள் தொடர்பில் ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் தங்களுக்குள் விசனம் தெரிவித்துக் கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor