மூன்றாவது முறையாக கைகோர்க்கும் விஜய் – பிரபுதேவா!

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து அவரது பி.ஆர்.ஓ. தயாரிக்க, சிம்புதேவன் இயக்க உள்ள படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இதனையடுத்து, பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய்.

vijay-pirabu-deva

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே தன்னை வைத்து படம் இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநர்களுக்கு ஒரு படம், புதிய காம்பினேஷனில் ஒரு படம் என்று புதிய ஃபார்முலாவில் படங்களில் நடிப்பது என திட்மிட்டிருக்கிறார் விஜய்.

அதன்படி நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடித்தார். தற்போது ஏற்கனவே தன்னை வைத்து ஹிட் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கத்தி படத்தில் இணைந்துள்ளார். அடுத்து சிம்புதேவன் என்ற புது காம்பினேஷன். அதன் பிறகு ஏற்கனவே தன்னை வைத்து ஹிட் கொடுத்த பிரபுதேவா உடன் இணைகிறார்.

2007 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு போக்கிரி படத்தின் மூலம் விஜய்க்கு சூப்பர்ஹிட் வெற்றியைத் தேடிக்கொடுத்தார் இயக்குனர் பிரபுதேவா. இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யை மீண்டும் ஹீரோவாக வைத்து 2009 ல் வில்லு படத்தை இயக்கினார் பிரபுதேவா.

ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன்பிறகு பிரபுதேவாவின் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த எங்கேயும் காதல், வெடி படங்களும் ஓடவில்லை. எனவே, ஹிந்தியில் பிஸியாகிவிட்டார் பிரபுதேவா.

தற்போது ஆக்ஷன் ஜாக்சன், சிங் இஸ் பிலிங் ஆகிய ஹிந்திப் படங்களை இயக்கி வரும் பிரபுதேவா, இப்படங்களை முடித்துவிட்டு மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க உள்ளார்.

Recommended For You

About the Author: Editor