யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை வருகை தரவுள்ளார்.
வடமாகாண ஆளுநர் பளிஹக்கார பலாலியில் வைத்து ஜனாதிபதியை வரவேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்பின்னர் ஜனாதிபதி வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலையில் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும் புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகவும்,நீதிமன்றம் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் நிலமைகளை ஆராய்வதற்காகவுமே ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகின்றது.