மூதாட்டி கொலை; சந்தேகத்தில் ஒருவர் கைது!

இளவாலை பொலிஸ் பிரிவில் கடந்த புதன்கிழமை அதிகாலை வீட்டில் தனிமையில் இருந்த 75 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் சுன்னாகம் சூராவத்தையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இளவாலைப் பொலிஸாரல் கைது செய்யப்பட்டார்.

இளவாலைப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சூராவத்தைப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் அவரது வீட்டில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை மதியம் கைது செய்யப்பட்டார் என்றும், அத்துடன் பிற்பகலில் அவரது மனைவியும் குழந்தையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இரவு 11 மணியளவில் மனைவியும் பிள்ளையும் விடுவித்துள்ளனர். சந்தேகநபரை தொடர்ந்து தடுத்துவைத்து தாம் விசாரணைக்குட்படுத்திவருகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.