மு.த.தே.கட்சியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முற்போக்கு தமிழ் தேசிய கட்சியால் கடந்த வெள்ளிக்கிழமை (03) முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது.

10580469_1496726423908926_1767635078_n

பேராசிரியர் எஸ்.சிவச்சந்திரன் குளிர்பால் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

விசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளை நிபந்தனைகள் இன்றி விடுவிக்கும் படி இந்த உண்ணாவிரத போராட்டம் நல்லூர் ஆலயத்தின் பின்வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை (03) காலை 10 மணி முதல் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

உண்ணாவிரதத்தின் முதல் நாளான வெள்ளிக்கிழமை (03) இரவு, உண்ணாவிரத கொட்டகைக்கு சட்டவிரோத மின்சாரம் பெற்றமை தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இருந்தபோதும், தொடர்ந்து உண்ணாவிரதம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், செயலாளர் நாயகம் பொலிஸ் பிணையில் மறுநாள் விடுவிக்கப்பட்டார்.

தற்போது, முன்னரே குறிப்பிடப்பட்டமைக்கமைய போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மாலi 5 மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.