முன்னாள் மாவட்ட நீதிபதி மு.திருநாவுக்கரசு காலமானார்

முன்னாள் மாவட்ட நீதிபதியான மு.திருநாவுக்கரசு சுகயீனம் காரணமாக தனது 75 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பில் காலமானார்.

அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினராவார்.

thirunavukarasu

தமிழின் மீதும் சைவத்தின் மீதும் அதிக பற்றுக்கொண்டவர். மக்களைக் கவரக்கூடிய விதத்திலே அழகான தமிழிலே பேசக்கூடிய ஒருவர்.

விகடகவி என்ற பெயரில் பத்திரிகைகளில் தனது ஆக்கங்களை எழுதி வந்தார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தந்தை செல்வநாயகத்தின் ஞாபகார்த்தக் கூட்டத்தில் உரை நிகழ்த்தியிருந்தார். தான் சரியென்று கருதுகின்ற விடயங்களை எவருக்குமே அஞ்சாது அது தொடர்பான கருத்துக்களை மக்களிடம் எடுத்துக்கூறி வந்தவர்.

இவர் அரசியலில் மாத்திரமல்லால் சைவப் பிரசங்கங்களிலும் சிறந்து விளங்கி மக்கள் மத்தியிலே பெருமதிப்பைப் பெற்றிருந்தார்.