முன்னாள் போராளி சுட்டுக்கொலை

மன்னார் வெள்ளாங்குளம் சேவலங்கா கிராமத்தில் நேற்று இரவு 8.30 மணியளவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் போராளி ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் வெள்ளாங்குளம்,கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் வயது 34 என்பவரே உயிரிழந்தவராவார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,

மேசன் வேலை செய்து முடித்து விட்டு தனது வீட்டிற்கு வந்து தனக்கு கிடைத்த இந்திய வீட்டுத்திட்ட வீட்டுக்காக கல்அரிந்து கொண்டிருந்த வேளை வீட்டிற்கு வந்த மூவர் அவரை வெளியில் அழைத்து துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் அவரது காதுப்பகுதியில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் உயிலங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.