முதியோருக்கு கண்வில்லைகள் வழங்கல்

சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகம், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு கண்வில்லைகளை இலவசமாக வழங்கும் பணியை மேற்கொண்டு வருவதாக வடமாகாண சமூக சேவை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 60 வயதை அடைந்த கண்வில்லை தேவைப்படும் முதியவர்கள், கண் வைத்தியரின் மருத்துவ அறிக்கையை பெற்று, தமது பிரதேச செயலகத்திலுள்ள முதியோர் மேம்பாட்டு அலுவலர் அல்லது சமூக சேவைகள் அலுவலரை தொடர்புகொண்டு இந்த இலவச கண் வில்லைக்காக விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கண்வில்லைகள், முதியோர் தேசிய செயலகத்தால் வழங்கப்படும்.

வறிய முதியோரின் உதவும் திட்டத்தின் கீழ், சமூக சேவைகள் அமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன