முகப்புத்தகத் தொடர்பு – யாழ்.ஊடகவியலாளரிடம் விசாரணை!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கும் தொலைகாட்சி ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவரையே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று (திங்கட்கிழமை) கொழும்பிற்கு அழைத்து விசாரணை செய்த பின்னர் விடுவித்துள்ளனர்.

புலம்பெயர் நாட்டில் வசிக்கும் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர் என அடையாளப்படுத்தப்பட்ட நபருடன் ஊடகவியலாளர் முக புத்தகத்தில் நட்பில் இருந்தமை தொடர்பில்லையே விசாரணைக்கு அழைக்கப்பட்டு சுமார் மூன்று மணிநேர விசாரணையின் பின்னர் ஊடகவியலாளரை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor