மாபிள் வெட்டிய இளைஞன் படுகாயம்

accidentமாபிள் வெட்டும் இயந்திரத்தினால் மாபிள் வெட்டும் போது படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். மானிப்பாய் கத்தர் கோவில் பகுதியில் நேற்றுக்காலை 11.30 மணியளவில் இவ்விபத்துஇடம்பெற்றுள்ளது. அவரின் இரு தொடைகளிலுமே பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடுவில் தெற்கு மானிப்பாய் வீதியைச் சேர்ந்த தர்மராசா சந்திரகுமார் (வயது 24) என்ற இளைஞரே மேசன் தொழில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை, வரிகள் கொண்ட புதிய மாபிள் வெட்டும் இயந்திரத்தினால் மாபிள்கள் வெட்டிக் கொண்டிருந்த வேளை, இரு தொடைகளில் வெட்டுக்கு இலக்காகியுள்ளது.

இரு தொடைகளிலும் பலத்த வெட்டுகாயம் எற்பட்டுள்ளதால், சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக யாழ். போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Recommended For You

About the Author: Editor