மாகாண சபை அமர்விற்கு மாவை வருகை

வடக்கு மாகாண சபை அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் செயலாளர் நாயகமுமான மாவை சேனாதிராசா கலந்து கொண்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள மாகாண சபைக் கட்டடத் தொகுதியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்றைய அமர்விற்கு மாவை சேனாதிராசா வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.