மனித மண்டையோடுகள் மாதகலில் நேற்றும் மீட்பு

elumbukooduஇராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட மாதகல் மேற்குப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மனித மண்டையோடுகள், எலும்புக் கூடுகள் என்பன மீட்கப்பட்டு வருகின்றன.

நேற்றுப் புதன்கிழமை இரண்டு மனித மண்டையோடுகள் மற்றும் பல் தாடைகள், எலும்புகள் என்பன இந்தப் பகுதியில் உள்ள மலசல கூட குழி ஒன்றை மீள்நிர்மாணம் செய்ய முற்பட்டபோது மீட்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினரால் யாழ். குடாநாடு கைப்பற்றப்பட்ட பின்னர் மாதகல் மேற்குப் பகுதி உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு கடந்த வருடமே விடுவிக்கப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு அண்மையிலும் இதேபோன்று மலசலகூடம் ஒன்றை அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டப்பட்ட போது அந்தக் குழியிலிருந்து மண்டையோடுகள் மற்றும் எலும்புக் கூடுகள் என்பன மீட்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.