மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பில் ராதிகா சிற்சபேசனிடம் தெளிவுப்படுத்தப்பட்டது – அனந்தி

ananthy-sasikaran-tnaமனித உரிமை பிரச்சினைகள் உட்பட வடக்கின் நிலைமைகள் குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் பிறந்த ராதிகா கனடாவின் ஸ்கார்பரே ரூஜ் ரிவர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராவார்.

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்த அவர் அங்குள்ள தற்போதைய நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் கலந்து கொண்டார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட அனந்தி சசிதரன், வடக்கில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை, மனித உரிமை மீறல்கள் குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

அத்துடன் வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பாகவும் விளக்கப்பட்டது.

வடக்கில் அவர் திரட்டிய தகவல்கள் தொடர்பில் கனடா திரும்பிய பின்னர் என்ன செய்ய போகிறார் என்ற உத்தரவாதங்களை ராதிகா சிற்சபேசன் வழங்கவில்லை என்றார்.

தொடர்புடைய செய்தி

யாழ்.வந்த ராதிகா சிற்சபேசன் நலன்புரி முகாம்களுக்கும் நேரடி விஜயம்