பௌர்ணமி தினத்தில் கோழி இறைச்சி விற்றவர் கைது

arrest_1கோழி இறைச்சி விற்பனை செய்த ஒருவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குருநகர் பகுதியினைச் சேர்ந்த மேற்படி நபர் வீட்டுடன் இணைந்த கோழி இறைச்சி விற்பனை நிலையத்தில் பௌர்ணமி தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை கோழி இறைச்சியினை விற்பனை செய்து கொண்டிருக்கையிலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பௌர்ணமி தினங்களில் இறைச்சி வகைகள் விற்பனை செய்வதற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.