பெண் கொலை; சந்தேகத்தில் ஒருவர் கைது

arrest_1யாழ். நாச்சிமார் கோவில் தேர் கட்டிடத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். சிறுகுற்றத் தடுப்புப் பொலிஸார் இன்று திங்கட்கிழமை (28) இதனைத் தெரிவித்தனர்.

யாழ். அரியாலையைச் சேர்ந்த மார்க்கண்டு லோகராணி (வயது 45) என்ற பெண் கடந்த வியாழக்கிழமை (17) நாச்சிமார் கோவில் தேர் கட்டிடத்திலிருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், ஆனைக்கோட்டை பகுதியினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இக்கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்புப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணையின் பின்னர் மேற்படி நபரை யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி

பெண்கள் மீதான வன்முறைகளை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்