புத்தூரில் வீடு புகுந்து தாக்குதல்: ஒருவர் படுகாயம்

Fight Logoபுத்தூரியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத நபர்கள அவரது வீட்டுக்குள் புகுந்தே நேற்று இரவு 8.45 மணியளவில் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த குறித்த நபர் கோப்பாய் வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்கான யாழ். போதனா வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் சதிஸ்குமார் என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor