புத்தாண்டு சந்தைக்கு யாழில் இருந்து தென்னிலங்கைக்கு பொருட்கள் ஏற்றுமதி

vegitableதமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தென்னிலங்கையில் இடம்பெறவுள்ள புத்தாண்டுச் சந்தைக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்கறி வகைகள், பழ வகைகள் கொண்டு செல்லப்படுகின்றது.

புத்தாண்டைமுன்னிட்டு தென்னிலங்கையில் இலங்கை ஒலிபரப்பக் கூட்டுத்தாபனம், இலங்கை சமுர்த்தி அபிவருந்தி அதிகார சபை என்பவற்றின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள புத்தாண்டுச் சந்தைகளுக்குகே இவ்வாறு யாழில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

குறிப்பாக இந்த சந்தைகளுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கு வேண்டிய போக்குவரத்துச்செலவகளை குறிப்பிட்ட இரு நிவனங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன.

இதன் காரணமாக குறிப்பிட்ட சந்தைகளில் யாழ் மாவட்ட மரக்கறிகளான பீற்றூட் வெங்காயம் முள்ளங்கி, வாழைப்பழம் ,முந்திரிகை உட்பட பழ வகைகளும் கொழும்பு சந்தை விலையிலும் பார்க்க குறைவானதாக காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

தென்னிலங்கைக்கு பொருட்களை ஏற்றுபவர்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக அக்கறை காட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor