புதி­ய கோப்பி வகைகளை அறிமுகப்படுத்தியுள்ள Nestle

உள்­நாட்டில் வெளிப்­புற உணவு மற்றும் பான­வகைத் தீர்­வு­களை வழங்­கு­வதில் சந்­தையில் முன்­னிலை வகித்­து­வ­ரு­கின்ற Nestle Professional தனது புத்­தம்­ பு­திய உயர் வகை கோப்பி தீர்­வான Nescafe Alegria இனை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளதன் மூல­மாக இலங்­கையில் உயர் வகை கோப்பித் தீர்­வுகள் சந்­தையில் புரட்­சி­க­ர­மான மாற்­றங்­க­ளுக்கு வித்­திட்­டுள்­ளது.

Nestle

Nescafe Alegria கோப்பி தீர்­வா­னது சௌக­ரியம், பல்­துறை சிறப்­பம்சம் மற்றும் தரம் ஆகி­ய­வற்றைக் கொண்­டுள்ள ஒரு புத்­தம்­பு­திய, புத்­தாக்­கத்­து­ட­னான கோப்பி வழங்கல் தீர்­வாக உலகில் முதன்மை வகிக்கும் கோப்பி வர்த்­த­க­நா­ம­மான Nescafe இன் அனைத்து அத்­தி­யா­வ­சி­ய­மான சிறப்­பம்­சங்­க­ளையும் ஒருங்கே கொண்­டுள்­ளது.

மிகவும் தீவி­ர­மான கோப்பி பிரி­யர்­களின் தேவை­களை நிறை­வேற்றும் வகையில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள இது, Espresso, Americano, Cappuccino, Latte Macchiato மற்றும் Lungo ஆகிய கோப்­பியை அடிப்­ப­டை­யாகக் கொண்ட ஐந்து பான­வ­கை­களை வழங்­கு­வ­துடன், மேலும் ஐஸ் கோப்பி மற்றும் Frappe இற்­கான அடிப்­படை மூலத்­தையும் வழங்­கு­கின்­றது.

புத்­தம்­பு­திய இந்தப் புத்­தாக்கம் தொடர்பில் Nestle Professional நிறு­வ­னத்தின் உதவித் தலைமை அதி­காரி­யான ஜெகத் வெதகே கருத்துத் தெரிவிக்­கையில்,

வழ­மை­யான கோப்பி நுகர்வோர் மத்­தியில் மாற்­றங்­க­ளு­ட­னான வளர்ச்­சியை நாம் எமது கண்­கூ­டாகக் காண­மு­டி­கின்­றது. அண்­மைக்­கா­லங்­களில் உணவு மையங்­களின் எண்­ணிக்கை மிகத் துரி­த­மாக அதி­க­ரித்­து­வந்­துள்­ளது. நுகர்வோர் கோப்­பியை சுவைத்து மகிழும் போது அதன் தனிச்­சி­றப்பை நாடும் போக்கு அதி­கரித்துச் செல்­கின்­றது.

Nescafe Alegria கோப்பித் தீர்­வா­னது மர­பு­ரீ­தி­யான கோப்பி இயந்­திரம் வழங்கும் அதே நன்­மை­களைக் கொண்­டுள்­ள­துடன், எளி­மை­யான தொழிற்­பாட்டுமுறை மற்றும் இணை­யற்ற தயாரிப்பு நேரம் ஆகி­ய­வற்­றுடன் உண்­மை­யான உயர் வகை கோப்பியின் சுவை அனு­பவத்தை வழங்­கு­கின்­றது. என குறிப்­பிட்டார்.

Recommended For You

About the Author: Editor