பிரதேச செயலகங்களில் கடமையாற்றுவதற்கான கடிதங்கள் நாளை வழங்கப்படவுள்ளது

Samurdhiசமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபைக்குள் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகங்களில் கடமையாற்றுவதற்கான நியமனக் கடிதங்கள் நாளை சனிக்கிழமை வழங்கி வைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த முதலாம் திகதி யாழ். மாவட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையில் உள்வாங்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான பயிலுநர் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அவர்களுக்கான பயிற்சி இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவுறுகின்ற நிலையிலேயே இவர்கள் பிரதேச செயலகங்களில் கடமையாற்றுவதற்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களிலும் இவர்கள் கடமையாற்றுவதற்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நல்லூர் பிரதேச செயலகத்தில் நாளை சனிக்கிழமை காலை 09 மணிக்கு நடைபெறவுள்ள இதற்கான நிகழ்வில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வழங்கி வைக்கவுள்ளார்.

Related Posts