பிரதமர் மோடியுடன் ஃபேஸ்புக் மார்க் ஸக்கெர்பெர்க் சந்திப்பு

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனரான மார்க் ஸக்கர்பெர்க் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

facebook-ceo-mark-zuckerberg-meets-prime-minister-narendra-modi

இந்தியா வருகை தந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் டெல்லியில் நேற்று முன் தினம் இணையம் தொடர்பான மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

இதைதொடர்ந்து நேற்று காலை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது மாற்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதள பயன்பாட்டை விரிவுபடுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

பிரதமர் மோடியுடன் ஃபேஸ்புக் மார்க் ஸக்கெர்பெர்க் சந்திப்பு பின்னர் பிரதமர் மோடியை மார்க் ஸக்கர்பெர்க் சந்தித்து பேசினார்.

அப்போது கிராமங்களில் இணையதள சேவையை விரிவுபடுத்தும் திட்டம் குறித்து மோடியிடம் ஸக்கர்பெர்க் விவரித்தார்,