பாவித்த தேங்காய் எண்ணெயை மீண்டும் கறிகளுக்கு பயன்படுத்த வேண்டாம்!

சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
பாவித்த தேங்காய் எண்ணெயை மீண்டும் கறிகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என என சுகாதார அமைச்சு அறிவிக்கின்றது. பாவித்த தேங்காய் எண்ணெயை மீள் பயன்பாட்டுக்கு உட்படுத்த முடியும் என வெளியிடப்படும் விளம்பரங்களில் எவ்வித உண்மையுமில்லை எனவும் சுகாதார அமைச்சு அறிவிக்கின்றது.

thenkai-oil-ennai

இவ்வாறான விளம்பரங்கள் பாவனையாளர்களை தவறாக வழிநடத்துவதாகவும் தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சின் உணவு தொடர்பான ஆலோசனைக் குழு இத்தீர்மானங்களை எடுத்திருப்பதாக டாக்டர் மஹிபால தெரிவித்தார்.

சில வகையான தேங்காய் எண்ணெய் விளம்பரங்கள் குறித்தும் சுகாதார அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் டாக்டர் மஹிபால, இது குறித்தும் சுகா தார அமைச்சின் உணவு தொடர்பான ஆலோசனைக்குழுவின் நிபுணர்கள் ஆராய்ந்ததாகத் தெரிவித்தார்.

தேங்காய் எண்ணெய்களை மீள்பயன்பாட்டுக்கு உட்படுத்தலாம் எனத் தெரிவிக்கும் விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையல்ல என்பது உணவு தொடர்பான ஆலோசனைக் குழுவின் நிலைப்பாடாகும். அவை பாவனையாளர்களை தவறாக வழிநடத்துவது மட்டுமன்றி தவறான கருத்துணர்வைத் தோற்றுவிக்கும் செயற்பாடாகும்.

எதிர்காலத்தில் தேங்காய் எண்ணெய் தொடர்பான விளம்பரங்களின் போது இவ்விடயம் குறித்து கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.