பாடசாலை மாணவனைக் காணவில்லை!

missing personபுதுவருடத்தினத்தன்று வந்த கையடக்கத் தொலைபேசி அழைப்பை அடுத்து வீட்டிலிருந்து சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் மூன்று நாட்களாகியும் வீடு திரும்பவில்லையென்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளது.

இதில் க.பொ.த உயர்தரத்தில் கற்கும் து.சஜிகரன் (வயது 19) என்ற மாணவனே காணாமல் போயுள்ளார்.

புதுவருடதினத்தன்று மைதானத்திற்கு விளையாடுவதற்காக இவர் சென்ற போதும் இன்னமும் வீடு திரும்பவில்லை.

இது தொடர்பில் பெற்றோர் மைதானத்திற்கு சென்று நண்பர்களிடம் வினவியபோது கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்த நிலையில் விளையாட்டை இடையில் கைவிட்டு சென்றதாக தெரிவித்தனர்.

இதன்பின்னர் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்த முயற்சித்தபோதும் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor