பளையில் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

palai_policeபளை பொலிஸ் நிலையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், வடமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் காமினி சில்வா பிரதம அதிதியாக கலந்துகொண்டு சம்பிரதாய பூர்வமாக பெயர்ப்பலகையை திரை நீக்கம் செய்ததுடன், அலுவலகத்தினை நாடாவெட்டி திறந்து வைத்தார்.

கடந்த 2001 ஆண்டு ஏப்ரல் மாதம் அழிவடைந்த நிலையில் ஒப்படைக்கப்பட்ட பளை பொலிஸ் நிலையம் தற்போது வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், மாங்குளம் சிரேஷ்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பிக்க சிறிவர்த்தன, பளை பிரதேச செயலாளர் எஸ்.சத்தியசீலன், மற்றும் பொலிஸ் அதிகாரிகள், புத்திஜீவிகள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.