பலசரக்கு கடை தீக்கிரை

யாழ்ப்பாணம், கைதடி வடக்கு பகுதியில் அமைந்துள்ள பலசரக்குக் கடையொன்று செவ்வாய்க்கிழமை (14) இரவு தீக்கிரையாகியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தால் கடையிலிருந்த 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் அழிவடைந்துள்ளன.

இனந்தெரியாத நபர்கள் கடைக்கு தீ வைத்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.