பயங்கரவாதத்தை இந்த அரசாங்கமே உருவாக்குகிறது: ச.துர்க்கேஸ்வரன்

tnaபயங்கரவாதத்தை அரசாங்கமே உருவாக்குகிறது என காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் ச.துர்க்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கு வரி செலுத்தும் மக்களை இந்த அரசாங்கம் பழிவாங்குகிறது. இந்த அரசாங்கத்திடம் நாங்கள் பிச்சை கேட்கவில்லை. உங்கள் உரிமைகளையே கேட்கின்றோம்.

தமிழ் முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் இன ஒடுக்குமுறையை கடவிழ்த்துவிட்டு சிங்கள இனவாதத்தை இந்த அரசாங்கம் தோற்றுவித்துள்ளது. இந்த நாட்டில் பயங்கரவாதத்தை அரசாங்கமே உருவாக்குகிறது.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் உள்ள பிரதேச சபைகளை ஆளுனரைக்கொண்டு அரசாங்கம் முடக்கி வருகின்றது.

இந்த நிலையை மக்கள் நன்கு உணரத் தொடங்கிவிட்டார்கள். நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் இதனை நீரூபிப்பார்கள். நாங்கள் கூட்டமைப்பு அளிக்கும் வாக்குகள் எங்கள் உரிமைக்கு அளிக்கும் வாக்குகளாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.