பணிப்பகிஷ்கரிப்பால் பயணிகள் சிரமம்

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பெருமளவிலான பயணிகள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கொழும்பில் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளில் பயணிகள் நிரம்பிவழிந்து செல்வதை காணக்கூடியதாக உள்ளதுடன், போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

ரயில்வே தரப்படுத்தல் தொழிற்சங்க சம்மேளன ஒன்றியம் நேற்று புதன்கிழமை இரவிலிருந்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுவருகின்றது.

இருப்பினும், 108 ரயில் சேவைகளில் 15 ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக விசேடமாக பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தச் சேவை கண்டியிலிருந்து கொழும்புவரை, கம்பஹா, காலி, மாத்தறை ஆகிய பிரதான நிலையங்களிலிருந்து சேவையில் ஈடுபடும் எனவும் இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.